வீர வாஞ்சி நினைவு நாள்: எம்.எல்.ஏ., அதிகாரிகள் உள்பட பலர்… மரியாதை!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
vanchi3
vanchi3

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்எல்ஏ., கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா, மாவட்ட வருவாய் அலுவலா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வைத்து வாஞ்சிநாதன் 110வது நினைவு தினத்தை முன்னிட்டு வீரவாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனிசௌந்தர்யா வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். கோட்டாட்சித்தலைவா் இராமசந்திரன், வட்டாட்சியா் ரோசன்பேகம், ஆணையாளா் நித்யா, சுகாதார அலுவலா் வெங்கடேஸ்வரன் வருவாய் ஆய்வாளா் ஜாஸ்மீன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

vanchi4
vanchi4

அதனை தொடா்ந்து வாஞ்சிநாதன் தம்பி மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னா் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்ச்சியில் நகரத்துணைச்செயலாளா் பூசைராஜ், பொருளாளா் ராஜா,முன்னாள் நகா்மன்ற துணைத்தலைவா் கணேசன், மாவட்ட பிரதிநிதி லட்சுமணன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளா் ஞானராஜ், மாவட்ட எம்ஜீஆர் மன்ற துணைச்செயலாளா் ஜாகீர்உசேன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் இராஜகோபாலன், கனியத்தா, ஐயப்பன் மற்றும் பாலசுப்பிரமணியன், ராமசுப்பிரமணியன், மகேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் வேங்கடரமணன் வாஞ்சிநாதன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரயாதை செய்தார்.

vanchi2
vanchi2

இதனையடுத்து பேரூந்து நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு வாஞ்சி இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவா் ராமநாதன் வாஞ்நாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னா் நகர திமுக சார்பில் நகரச்செயலாளா் ரஹீம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கல்யாணி, நகர இளைஞரணி துணை அமைப்பாளா் இசக்கித்துரைபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஹக்கீம், எஸ்எம்.சேட், ஆகியோர் கலந்து கொண்டனா்.

vanchi1
vanchi1

நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத்தலைவா் ராமர், இளைஞரணி செயலாளா் ராஜீவ்காந்தி ஆகியோர் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவா் அய்யம்பெருமாள், மாவட்ட செயலாளா் சீதாராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.