July 31, 2021, 5:48 pm
More

    ARTICLE - SECTIONS

    அதிர்ச்சி: பிரபல ஒளிப்பதிவாளர் மறைவு!

    sivan - 1

    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

    தமிழ் சினிமாவின் தளபதி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். இவரின் தந்தை சிவன், மலையாளத் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனராக வலம் வந்தார்.

    மேலும் Abhayam, Yagam, Kochu Kochu Mohangal உள்ளிட்ட படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார்.

    santhos sivan - 2

    பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சிவன் தன்னுடைய 89-வது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் காலமானார்.

    இவரின் மகன்கள் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சய் சிவன் ஆகிய மூவரும் திரைத்துறையில் பிரபலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    28FollowersFollow
    74FollowersFollow
    1,331FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-