என்னென்ன பலனெல்லாம் தருது இந்த பிண்ணாக்கு கீரை!

punnaku kirai - 2026

குப்பையோடு குப்பையாக, அனைத்து இடங்களிலும் வளரக் கூடிய செடி வகை ஆகும். இதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். தரையோடு தரையாக வளரும் இயல்புடையது புண்ணாக்கு கீரை.

புற்று நோய்
பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை இக்கீரை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. –

விஷ கடி
நமது வீடு மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள், புதர்களில் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இத்தகைய ஒவ்வாமை பிரச்சனை நீக்கவும், விடம் பரவாமல் தடுக்கவும் பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும்.

செரிமான சக்தி
பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.

கல்லீரல்
அதிகம் மது, போதை பொருட்களை பயன்படுத்துதல், தவறான உணவு பழக்கம் கொண்டவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு அடிக்கடி பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

மூலம்
இன்றைய காலத்தில் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக மூலம் நோய் இருக்கிறது. அதிகம் காரமான உணவுகளை உண்பது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த மூல நோயை விரைவில் போக்குவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும் பிண்ணாக்கு கீரை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல பாதிப்புள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி உண்ண வேண்டும்.

வாயு தொந்தரவுகள்
வாதம் தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி சிலருக்கு வாயுக்கோளாறுகள் ஏற்படுகின்றது. பிண்ணாக்கு கீரை உடலின் வாத தன்மையை சீராக்கி வாயு கோளாறுகளை சீர் செய்து உடலை ஆரோக்கியம் பெற செய்கிறது. எனவே அடிக்கடி பிண்ணாக்கு கீரையை சாப்பிட்டுவிரைவில் வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.

சிறுநீரகங்கள்
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பிண்ணாக்கு கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவும் பேருதவி புரிகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் இரண்டு முறை பிண்ணாக்கு கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.

ஆண்மை குறைபாடு
இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. பிண்ணாக்கு கீரை சாற்றில் அமுக்கிரா கிழங்கை ஊற வைத்து, பிறகு காய வைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் பெருகும். ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

நோய் எதிர்ப்பு
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

நீரிழிவு நோய்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போதுபிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்ததால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.

பிண்ணாக்கு கீரை, சுக்கு பொடி, கடுக்காய் பொடி, மிளகு பொடி ஆகியவற்றை கொண்டு நாம் இந்த உணவை தயார் செய்யலாம்.

ஒரு பிடி பிண்ணாக்கு கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். 2 அல்லது 3 சிட்டிகை அளவுக்கு சுக்கு பொடியை சேர்க்க வேண்டும். ஒரு சிறிய அளவு கடுக்காய் பொடியும் சேர்க்கலாம். பிறகு கொஞ்சம் மிளகு பொடி சேர்க்கவும். சுவைக்காக தேவையான அளவு சிறிது உப்பு. இந்த கலவையோடு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து இறக்கிய பிறகு இதை வடி கட்ட வேண்டும். இதை பருகுவதன் மூலம் வயிற்று தொடர்பான கோளாறு மற்றும் வாத பித்த பிரச்னைகளை தடுக்கிறது.

அதே போல் இந்த கீரையை விளக்கெண்ணெய், ஆவார இலை பொடி, கடுக்காய் தோல் பொடி, நெல்லி வற்றல் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். அ்வ்வாறு கிடைக்கும் பசையை மூட்டுகளில் உள்ள வலியுள்ள இடத்தில் இதை தடவுவதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஒரு பிடி பிண்ணாக்கு கீரை, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் நெல்லி வற்றல் பொடி, நீரை விட்டு கொதிக்க வைத்து இதை தலையில் தடவினால் தலைவலி பறந்து விடும்.மெலோசியா

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

குர்கோரிபோரியா என்பது பிண்ணாக்கு கீரையின் தாவர பெயராகும். உடலில் விஷத்தை போக்கக் கூடியது. இதனால் பூச்சிகடிகளால் ஏற்படும் விஷத்தை போக்கும் தன்மையை கொண்டதாக இது விளங்குகிறது. வயிற்று வலி, சீத பேதி ஆகியவற்றை தடுக்கிறது.

பிண்ணாக்குக் கீரையை அரைத்து, அதில் சிறிதளவு மஞ்சள், கால் ஆணி ஏற்பட்ட இடங்களில் போட்டு வந்தால் கால் ஆணி மறையும்.

பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டு வந்தால் கால் வீக்கம் குணமாகும்.

பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டு, நீர்கடுப்பு குணமாகும்.

பிண்ணாக்குக் கீரை சாறு எடுத்து, அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு, உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் போல செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

பிண்ணாக்குக் கீரைச் சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து பிறகு காயவைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம் உண்டாகும். தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்..

இக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து பின்பு சோற்றுடன் நோய் கலந்து சாப்பிட்டு வர உடல்சூடு, சீதபேதி, ரத்தபேதி போன்றவை குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories