December 5, 2025, 5:44 PM
27.9 C
Chennai

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கெல்லாம் இலவச டிவி கொடுத்தவங்க… திமுக காரங்க: ஆர்.பி. உதயகுமார்!

திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சுட்டி காட்டியுள்ளது என்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் பயிற்சி முகாம் டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில், முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பி ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், செல்லம்பட்டி ராஜா மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் தமிழ்ச்செல்வன், கபி காசிமாயன், சிங்கராஜ பாண்டியன்,ராமகிருஷ்ணன்,சரவணகுமார், மற்றும் சிவராமகிருஷ்ணன் சோழவந்தன் சிவா, சிவசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர் பி உதயகுமார் பேசியதாவது:

தமிழகத்தில் தமிழ் மொழிக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர்கள் தான் மாணவ சமுதாயம். அதேபோல், தேசியக் கட்சியை வீழ்த்தி அண்ணாவை ஆட்சி கட்டிலில் அமர்த்த மாணவ சமுதாயம் கடுமையாக பாடுபட்டது.

அதே போல், அன்றைக்கு காங்கிரஸ் அரசால் ஜல்லிக்கட்டு உரிமை பறிபோனது. அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க மாணவர் சமுதாயம் கடுமையாக போராடியது அப்போது, தமிழக முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், பாரத பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு உரிமையை அம்மாவின் அரசு மீடடி தந்தது.

அதில், மாணவர்கள் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.

ஜெயலலிதா அம்மா 2011 ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது, மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை மேற்கொண்ட பொழுது, அதற்கு அதிகாரிகள் இதற்கு அதிகமாக நிதி செலவாகும் ஆதலால் மடிக்கணினிக்கு பதிலாக டேப்லட் வழங்கலாம், என்று கூறிய போது அதற்கு ஜெயலலிதா அம்மா, என் பிள்ளைக்கு என்ன விலை கொடுத்தாவது நான் மடிக்கணினி தான் கொடுப்பேன் என்று கூறினார். தற்போது இதுவரை 65 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்

அதேபோல், ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்குக்கு 2-ஜிபி டேட்டாவை இலவசமாகஅப்போது முதலமைச்சர் இருந்த எடப்பாடியார் வழங்கினார்.

இதன் மூலம் 10 லட்சம் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்றார்கள் .
இந்த இரு திட்டங்களும் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா, ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி கிரைண்டர் ஆகியவற்றை வழங்கினார், மாதந்தோறும் இரு வாரங்களில் அரிசி வழங்கினார். அதேபோல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தனி அமைப்பு உருவாகி இதன்மூலம் காய்கறி சமையல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வு இல்லாமல் இருந்தது .

திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். அதில், நாங்கள் ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், தற்போது 50 நாட்கள் ஆகியும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை. இதனால், மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

இந்த குழப்பத்தை போக்க முழுமையாக முறையாக அறிவிப்பை அரசு கொடுக்க வேண்டும் .

அதேபோல், பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால் ,அதற்கு தற்போது வேறு காரணம் கூறிவருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது .

இடமே இல்லை ஆனால், இரண்டு ஏக்கர் நிலம் தரும் என்று திமுகவினர் கூறினார்கள். அதேபோல் , 2006 திமுக ஆட்சி காலத்தில் இலவச கலர் டிவி கொடுக்கப்பட்டது. அதில், மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு கலர் டிவி கொடுக்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை வழங்க வேண்டும்.

தற்போது, கணினி புரட்சி ஏற்பட்டுள்ளது ஆனால், 10 ஆண்டுக்கு முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா, தீர்க்கதரிசனமாக மடிக்கணினி வழங்கினார்.

இதன் மூலம் பல லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
ஆளுநர்உரைக்கு பின்பு கூட சட்டமன்றத்தில் நமக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால், மக்கள் மன்றத்தில் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அவர் பேசினார்.

IMG 20210629 WA0237 - 2025

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories