பாதிரிநாடு ஆகும் தமிழ்நாடு?!

சற்றுமுன் சென்னை தமிழகம்
tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நிறுவனமான டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக பாதிரியார் ராஜ் மரியசூசை உட்பட 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது இதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி க.பாலசந்திரன் உள்ளார். பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி ஆகிய 2 பேர் மட்டும் உறுப்பினர்களாக உள்ளனர். 12 உறுப்பினர்களுக்கான பதவிகள் காலியாக இருந்தன.

இந்நிலையில் தற்போது புதிதாக 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக கீழ்க்காணும் நபர்களை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார். அவர்கள் விவரம்:

ஐஏஎஸ் அதிகாரி எஸ்.முனியநாதன் (தற்போது தொழிலாளர் நலஆணையர்),
பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் (சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர்),
முனைவர் கே.அருள்மதி (சென்னை),
அருட்தந்தை ஏ.ராஜ் மரியசூசை (டான் போஸ்கோ, ஏற்காடு).

இவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள் – என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 8 உறுப்பினர் பதவியும் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகக் கூறப் படுகிறது!

பாதிரியார் ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை. ஏற்கெனவே தமிழ்நாடு அரசுப் பணிகளில், கிறிஸ்துவர்களாக இருந்து கொண்டு, இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக இந்துக்களின் பெயர்களில் தங்களை இந்து என்று சான்றிதழ் அளித்து அரசுப் பணிகளில் பலர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இப்போது அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யக் கூடிய தேர்வாணையத்தின் உறுப்பினராக பாதிரி ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பது, தமிழ்நாடு பாதிரிநாடு ஆகும் ஐயத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.