gayatri - 2026

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு இளம்பெண் கன்னியாகுமரி இளைஞரை கரம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பகுதியில் மணிகண்டன் மகள் காயத்ரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.

இதுகுறித்து மணிகண்டன் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் காயத்ரியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் காயத்ரியின் செல்போன் சிக்னல் மூலம் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் மேலசுண்டவிளை பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அங்குள்ள போலீசாரின் உதவியுடன் சுண்டவிளை பகுதிக்கு சென்றனர்.

அங்கு காயத்ரி தனது காதலருடன் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காயத்ரி மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கருங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

அந்த விசாரணையில் காயத்ரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கருங்கல் மேலசுண்டவிளை பகுதியை சேர்ந்த விஜின் என்பவர் அறிமுகமாகி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் காயத்ரி தனது காதலன் விஜினை விழுப்புரம் வரவழைத்து அவருடன் கருங்கலுக்கு ஓடிவந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆகவே காயத்ரி காணாமல்போன வழக்கு பாலுசெட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதனால் காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்காக காஞ்சிபுரம் அழைத்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending