
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி வரை நடக்கிறது.
வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று, நிதியமைச்சர் உரையாற்றினார்.
மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் – நிதியமைச்சர்
மாநில பேரிடர் நிவாரணம் மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் – நிதியமைச்சர்
பெண்கள்-குழந்தைகள் மீதான குற்றங்கள், இணையவழி, பொருளாதார குற்றங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் – நிதியமைச்சர்
மீனவர்கள் நலனுக்காக ₨1,149.79 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்
பாசனத்திற்காக ₨6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நிதியமைச்சர்
தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும்; இதற்காக ₹433 கோடி ஒதுக்கீடு.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ₹150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ₹500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ₹6,607 கோடி நிதி ஒதுக்கீடு.
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.
நீதித்துறைக்கு ₹1713 கோடி ஒதுக்கீடு; பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்கு ₹8,930.29 கோடி; சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ₹4,807 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடி, தொல்லியல் துறைக்கு ₹29 கோடி ஒதுக்கீடு.
நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ₹3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.
மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்
➤ திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்
➤ விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடெல் பார்க் அமைக்கப்படும்
➤ *சுற்றுலாத்துறைக்கு ₹187 கோடி ரூபாய் ஒதுக்கீடு *
விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் நிறுவப்படும்
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு; தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்வு
6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.
திருத்திய வரவுசெலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
தேர்தல் வாக்குறுதியின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூன் 3ல் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ.10 லட்சம் வழங்கப்படும், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் உரை
2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் தமிழ் செம்மொழி விருது ரூபாய் 10 லட்சம் தொகையுடன் இனி வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
- சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807.56 கோடி உயர்த்தி ஒதுக்கீடு.
- அனைத்து துறை அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.
- பேரிடர் மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1360 கோடி போதுமானதாக இல்லை.
புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்
புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைக்கப்பட்டு உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு
தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 14,317 புதிய பணியிடங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையின் தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும். காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம்
கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 79,395 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற மேம்பாட்டு தொகுதி நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்
சட்டமன்ற மேம்பாட்டு தொகுதி நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டம் விரைவில் தொடங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு
புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கலைஞர் பெயரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3.954.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும்:
தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அடிப்படை கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1,303 ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும், 865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 குறைவு
தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு உழைக்கும் வர்க்கத்தினருக்கு பேருதவியாக இருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இருசக்கர வாகனங்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.4,142 கோடி நிதி ஒதுக்கீடு
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.4,142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான இலவச பள்ளி சீருடைகளை நெசவாளர்கள் மூலம் தயாரிக்க ரூ.409 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்
மகளிர் சுய உதவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.