
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு புதன்கிழமை ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆடிப்பூர திருவிழாவையொட்டி, அம்மனுக்கு இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி, அன்று காலை கோமாதா பூஜை, கணபதி ஹோமம், பரிவார தேவதைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தார். பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. கோயில் நிர்வாகி சிவா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேலும், வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள அலங்காரவள்ளி சமேத பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது.