பழனியில் சிவக்கார்த்திகேயன் சுவாமி தரிசனம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
sivakarthikeyan 1
sivakarthikeyan 1

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை படபிடிப்பு முடித்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்தார்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு பிறந்த மகன் பெயரில் அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

அதற்கு முன்னதாக அடிவாரம் பகுதியில் இருந்து மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோயில் சென்று முருகனை வழிபட்டார்.

பின்னர் அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு கொடுத்து அபிஷேக பொருட்களை வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.