
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதை விட, அந்த குற்றத்தை செய்த குற்றவாளிக்கு நீதிபதி கொடுத்த தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
33 வயதான பெண் ஒருவரை, 2 பேர் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் பலாத்காரம் செய்த குற்றவாளிகளும் ஒரே அபார்ட்மென்ட்டில் வசித்து வந்துள்ளனர்.
பல நாட்களாக இரண்டு பேரும் சேர்ந்து இந்த பெண்ணை கண்காணித்து வந்துள்ளனர். பலாத்காரம் செய்த இரண்டு பேரில் ஒருவருக்கு வயது 32, மற்றொருவருக்கு வயது 17. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகள் இரண்டு பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
17 வயது சிறுவனை, சிறார் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், 32 வயதான இளைஞருக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால், அந்த இளைஞர் தன்னுடைய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை அடுத்து, அவரது வழக்கை பெண் நீதிபதி ஒருவர் விசாரித்தார்.
இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்த நீதிபதி, அந்த இளைஞர் 11 நிமிஷம் மட்டுமே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால், இது மிக குறைந்த நேரமே பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறி, ஸ்விஸ் சட்டதிட்டங்களுக்கு இணங்கி அந்த இளைஞருக்கு 51 மாதங்களில் இருந்து 36 மாதங்களாக தண்டனையை குறைக்கிறேன் என்று தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.