அக்.31 வரை மதம் சார் நிகழ்ச்சிகளுக்கு தடை! தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவும் கட்டுப்பாடு!

Published:

dmk stalin - 2026

தமிழகத்தில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் அக்.31ஆம் தேதி வரை தடை நீ்ட்டிக்கப்படுவதாக மு.க.இச்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. இச்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மற்றும் கோவிட் தொற்றின் மூன்றாம் அலையை தமிழகத்தில் தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரையில் திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.

  • பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.

பொது போக்குவரத்தை அவசியத்திற்காக மட்டுமே பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

கூட்டம் கூடும் இடங்களுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ பொதுமக்கள் செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கோவிட் மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மத்தியஅரசின் உள்துறை சார்பில் சிறப்பு குழு அறிக்கை அளித்து உள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

பள்ளி கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் , பொருளாதார நலன் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் தொடரந்து செயல்படும்.இருப்பினும் திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.

*கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட் தொற்று, நிபா வைரஸ் காரணமாக அம்மாநிலத்திற்கு பொது பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

அறிக்கை முழு விவரம்

மாலை அணிவிக்க கட்டுப்பாடு

விடுதலைக்காக தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மட்டுமே அனுமதி. அது மட்டுமல்லாது மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வழங்கப்படுகிறது.

புகழ்பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், ஐந்து நபர்களுக்கு மிகாமல் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று மாலை அணிவிக்கலாம்.

கோவிட் மூன்றாவது அலையை தடுப்பதற்கு தடுப்பூசிபங்கு முக்கியமானது தமிழகத்தில் 45 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் , 12 சதவீதம் பேருக்கு 2 வது டோஸ் ஊசி போடப்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img