அஞ்சல்… அண்ணாமலை… அஞ்சேல்..!

annamalai - 2026

இந்த பாஜக அண்ணாமலையார் முதல்வருக்கு அஞ்சல் அட்டை எழுதும் அறிவிப்பை செய்திருப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என சொன்னோம்

இதற்கு ஆங்காங்கே கட்சி தலமை சொன்னதை கேட்காதவன் கட்சிக்காரன் அல்ல என சில குரல்கள் எம்மை கண்டித்து வருகின்றன‌

இவர்களின் அண்ணாமலை விசுவாசம் நல்லது, இதை திமுகவில் காட்டினால் 200 ரூபாய் கிடைக்கும் இங்கு அதெல்லாம் கிடைக்காது

முதலில் நாம் பாஜக கட்சி அல்ல, அங்கு வரும் விருப்பமோ ஆசையோ இல்லை. நாட்டுக்கு தேவையான காரியங்களை பாஜக செய்யும் பொழுது மகிழ்கின்றோம், 1950லே நேரு செய்ய வேண்டிய வேலையினை மோடி செய்யும் பொழுது அதை சுட்டி காட்டுகின்றோம் அவ்வளவுதான்

அண்ணாமலை மேல் எமக்கு ஒரு மரியாதை உண்டு, கட்டுபாடான காவல்துறை மற்றும் உயர்படிப்பு பெற்றவரும் ஊடகத்தாரின் எல்லா கேள்விக்கும் பதில் வைத்திருப்பவரும் சுருக்கமாக சொன்னால் மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு பெற்றவரும் அவர்தான், தனிபட்டமுறையில் நாம் அவரை வாழ்த்துகின்றோம்

ஆனால் இந்த அஞ்சல் அட்டை அதுவும் 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பினால் என்னாகும் என்றால் ஒன்றும் ஆகாது

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

துரைமுருகன் தன் பாணியில் பாஜகவின் மொத்த எண்ணிக்கையே 10 லட்சம்தான் என கலாய்ப்பார்

முக ஸ்டாலின் வழக்கம் போல் எட்டியே பார்க்கமாட்டார்

ஆனால் பதிலுக்கு பலகோடி பெரியார் பிறந்த நாள், அண்ணா நாள், கருணாநிதி டே, சமூக நீதி டே என வாழ்த்துக்கள் கோடி கணக்கில் கமலாயத்துக்கு வரும்

அதை அண்ணாமலையும் அவரின் கட்சியும் படித்து பார்க்க நேரமிருந்தால் படிக்கட்டும், ஆம் திமுக அப்படிபட்ட கட்சி, நேரு நான் சென்ன்ஸ் சொன்னதற்கே நோ சென்ஸ் என கடிதம் எழுதி அழிசாட்டியட்டியம் செய்தவர்கள்

அண்ணாமலை நேருக்கு நேர் ஸ்டாலினை சந்திக்கலாம், அனுமதி கோரலாம். ஸ்டாலின் மறுத்தாலும் சிக்குவார் அனுமதித்தால் ஒன்றும் கடித்து வைத்துவிட மாட்டார்

அப்படி செய்யும்பட்சத்தில் அண்ணாமலைக்கு இன்னும் மக்களிடம் வரவேற்பு கூடும், முதல்வரிடம் என்ன கோரிக்கை வைத்தேன் என விளக்கினால் இன்னும் நற்தோற்றம் ஏற்படும்

நாம் அதைத்தான் சொன்னோம்

டெல்லி அரசியலை விட தமிழக அரசியல் வித்தியாசமான களம், இங்கே ஒருமாதிரி ஆட வேண்டும், அரசுக்கு நெருக்கடியினை பல வழிகளில் கொடுத்து கொண்டே இருக்கவேண்டும், தேனி போல் கொட்டி கொண்டே இருக்க வேண்டும்

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

அதைத்தான் சொன்னோமே தவிர மற்றபடி கமலாயத்துக்கோ எமக்கோ சம்பந்தமில்லை, அது வேண்டாம்

காரணம் இதே பாஜக நாளை சொதப்பினால் அதை கண்டிக்க நாம் தயாராக இருத்தல் வேண்டும் அதுதான் தேசபக்தி

அது அவர்கள் கட்சி நாம் ஏதும் உத்தரவோ ஆலோசனையோ சொல்லமுடியாது, நாம் அண்ணாமலை ஒரு வளரும் தலைவர் எனும் வகையில் நம் கருத்தை சொன்னோம்

சரி, அவர்கள் அஞ்சல் அட்டை அனுப்பட்டும்

பதிலுக்கு கோடான கோடி அட்டைகளை திமுக அனுப்பும் அல்லது வேறுவகையில் வம்பிழுக்கும்

ஒன்றை மட்டும் யாரும் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்

திமுக அரசு தோல்வியின் உச்சத்தில் இருக்கின்றது, திகைத்து நிற்கின்றது, ஒரு உள்ளாட்சி தேர்தலை கூட நடத்தமுடியா அளவு அஞ்சுகின்றது

ஜக்கி மீதான தாக்குதலில் இருந்து பின் வாங்கியதில் இருந்து போதகர்கள் கைது வரை அதன் அச்சம் தெரிகின்றது

இப்பொழுது அவர்கள் பிரச்சினையினை மடைமாற்றம் செய்கின்றார்கள், தங்கள் தோல்வியினை மறைக்க மக்களை வேறு வகையில் திருப்புகின்றார்கள்

அர்ச்சகர் முதல் பெரியார் சிலை, சமூக நீதி டே, சதுர்த்திக்கு தடை என அவர்கள் மாற்றிவிடுவதெல்லாம் வேறு களத்தில் சண்டையிடுங்கள் எனும் தந்திர அரசியல்

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

அண்ணாமலை இதில் சிக்க கூடாது, நேரடியாக ஸ்டாலினை சந்தித்து இரண்டில் ஒன்றை கேட்டுவிட்டு நீதிமன்றமோ இதர நடவடிக்கைகளையோ மேற்கொள்ளலாம்

அதுதான் நல்லது அவசியமனது கூட‌

மாறாக அவர்கள் இப்படி புறவாசல் சண்டைக்கு இழுத்து அதிலே காலமெல்லாம் சண்டையிட பாஜகவினர் தயார் என்றால் அதை செய்யட்டும்

நாம் யாருக்கும் ஆதரவும் அல்ல எதிரியும் அல்ல, தேசமும் இத்தேசத்தின் கலாச்சார இந்துமதமும் நமக்கு முக்கியமானவை அதை யார் காக்க முன்வந்தாலும் நாம் ஆதரித்து கொண்டே இருப்போம்்

  • ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories