தமிழகத்துக்கு புதிய ஆளுநர்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

சற்றுமுன் தமிழகம்
rn ravi tn governor
rn ravi tn governor

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆக, ஆர்.என்.ரவி நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். இது குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது, நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றிவரும் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநராக தற்போது பதவி வகித்து வரும் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக் காலம் நிறைவடைந்ததை ஒட்டி, தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப் படுவார் என்று கூறப்பட்டது. அதே நேரம், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோஹித்தை அம்மாநிலத்துக்கு முழு நேர ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்!

ரவீந்திர நாராயணன் ரவி, தற்போது நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.