பிரபல வில்லன் நடிகர் உயிரிழப்பு!

rishbhava
rishbhava

பிரபல வில்லன் நடிகர் திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ரிஸபவா. இவர் கேரள மாநிலம் கொச்சியை பூர்விகமாக கொண்டவர்.

ரிஸபவா 1990 ஆம் ஆண்டு ஷாஜி கயிலாஸ் இயக்கத்தில் வெளியான டாக்டர் பசுபதி என்ற படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ரிஸபவா. பெரும்பாலும் மிரட்டும் வில்லன் கதாப்பாத்திரத்திலேயே நடித்துள்ளார் ரிஸபவா. ஹரிஹர் நகர் படத்தில் அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தார்.

120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரிஸபவா, அதிகப்படியாக வில்லன் கேரக்டர்களிலேயே நடித்துள்ளார்.

மேலும் ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் ரிஸபவா. கபூலிவாலா, நேரியன் சிபிஐ, கவர் ஸ்டோரி, அனியன் பாவா சேட்டன் பாவா மற்றும் பலராம் Vs தாரதாஸ் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.

ரிஸபவா மேடை நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வி.கே.பிரகாஷ் இயக்கிய ஹேம்லெட் தழுவலான கர்மயோகி படத்துக்காக 2010 ஆம் ஆண்டு சிறந்த டப்பிங் கலைஞருக்கான கேரள மாநில விருதை வென்றார் ரிஸபவா.

rishabhava
rishabhava

கடைசியாக மம்மூட்டியுடன் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் ஒன்றில் நடித்துள்ளார் ரிஸபவா. நடிகர் ரிஸபவா மனைவி, மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் ரிஸபவாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிஸபவாவுக்கு திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டது.

இதனால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரிஸபவா. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பகல் ரிஸபவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரிஸபவாவின் திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு மலையாள திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories