தவறாக போட்ட தடுப்பூசி! உயிரிழந்த குழந்தை.. உறவினர்கள் போராட்டம்!

baby injection
baby injection

நாகர்கோவில் வடசேரியில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதர நிலைய செவலியர்கள் தவறான முறையில் தடுப்பூசி செலுத்தியதால் இரண்டரைமாத ஆண் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி காட்டுநாயகன் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 32). இவருடைய மனைவி ஆறுமுககனி (வயது 21). இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு குழந்தை உண்டு.

இந்த நிலையில் ஆறுமுககனிக்கு கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பெற்றோர் நல்லபடியாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த 8-ந் தேதி ஓட்டுபுரை தெருவில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்காக நடைபெற்ற தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

அதற்கு பின்னர் குழந்தையின் உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை கடந்த 11-ந் தேதி கால் வீக்கம் எடுத்து திடீரென இறந்துவிட்டது.

குழந்தையின் மூக்கு வழியாக ரத்தம் வழிந்து இறந்ததாக கூறபடுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அரசு செவலியர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் எதுவும் கூறவில்லை என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுபற்றி குழந்தையின் பெற்றோர் கூறுகையில், ”நாங்கள் ஓட்டுபுரை தெருவில் உள்ள சத்துணவு கூடத்தில் வைத்து எங்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தினோம். ஐந்து டோஸ் மருந்தை மூன்று டோஸில் போட்டனர். கையில் ஒரு ஊசியும், இரண்டு தொடையில் இரண்டு ஊசியும் போட்டனர். அதன்பிறகு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது.

தவறான தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்ததாக சந்தேகிக்கிறோம். எங்கள் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் நடக்ககூடாது. எனவே இதுதொடர்பாக வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.

அரசு நகர்புற ஆரம்ப சுகாதர நிலைய செவலியர்கள் தவறான முறையில் தடுப்பூசி செலுத்தியதால் இரண்டரைமாத ஆண் குழந்தை மரணமடைந்தது என்று பெற்றோர் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories