தண்டவாளத்திலே விளையாடி விட்டு கற்களை விட்டு சென்ற சிறுவர்கள்! தப்பிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்!

train
train

கிரிக்கெட் விளையாடிவிட்டு கற்களை தண்டவாளத்தில் போட்டு சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து அனுமந்த நகர் இடையே வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் ரயில் நிலையத்தின் அருகில் வந்து கொண்டிருந்ததால் குறைவான வேகத்தில் வந்துள்ளது. அப்போது குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் ஏதோ உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனால் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை ப்ரேக் போட்டு நிறுத்தியுள்ளார். பிறகு கீழே இறங்கி பார்த்த போது குளிர்சாதனப் பெட்டியின் அடியில் கல் மீது உரசிய படி நின்றுள்ளது.

இது பற்றி ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் கல்லை அகற்றி உள்ளனர்.

இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் ஸ்டம்புக்கு பதிலாக தண்டவாளத்தில் இருக்கும் கற்களை வைத்து விளையாடி இருந்தது தெரியவந்துள்ளது.

இதில் கிரிக்கெட் விளையாடி விட்டு திரும்பி செல்லும் போது தண்டவாளத்தில் வைத்த கல்லை எடுக்காமல் சென்றுள்ளனர். இதனால் தான் ரயில் பெட்டிகள் மீது கல் உரசியது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தண்டவாளத்தில் கல்லை வைத்து சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories