வீட்டைக் குளிர்ச்சியாக வைக்கும்! கின்னஸ் சாதனை படைத்த வெள்ளை நிற பெயிண்ட்!

paint
paint

ஆராய்ச்சியாளர்கள் தூய்மையான வெள்ளை நிற பெயிண்டை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே அடர் வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கியுள்ளனர்.

இதுவே தூய வெண்மை நிறம் கொண்ட பெயிண்ட் என்ற கின்னஸ் உலக சாதனையையும் இந்த பெயிண்ட் படைத்திருக்கிறது.

ஆனால் உலக சாதனை படைக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நோக்கல் அல்ல. உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மட்டுமே இந்த பெயிண்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

white paint
white paint

சூரிய வெப்பத்திலிருந்து கட்டிடத்தை தடுப்பது மட்டுமே இந்த பெயிண்ட் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும். இந்த பெயிண்ட் குறித்து பர்டியூ பல்கலைக்கழக மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் ருவான் கூறுகையில், “7 ஆண்டுகளுக்கு முன் ஆற்றலை மிச்சப்படுத்துவதும், காலநிலை மாற்றம் குறித்து மட்டுமே எங்கள் எண்ணம் இருந்தது. அதன் மூலம் உருவானதே இந்த தூய வெள்ளை பெயிண்ட். இந்த பெயிண்ட் சூரிய வெளிச்சத்தை அதிகளவில் பிரதிபலிக்கும்.

இந்த பெயிண்ட் 98.1% அளவுக்கு சூரிய கதிர்வீச்சை பிரதிபலிப்பதுடன், இன்ஃபிரார்டு வெப்பத்தையும் தடுக்கிறது. இது பிரதிபலிக்கும் வெப்பத்தை விட மிகவும் குறைந்த அளவே வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. இந்த பெயிண்ட் அடிக்கப்படும் கட்டிடம் எந்த ஆற்றலையும் எடுத்துக்கொள்ளாமலே சுற்றுப்புற வெப்பநிலையை குளிர்வாக வைக்கிறது.

1000 சதுர அடி கொண்ட மாடி பரப்பளவை இந்த பெயிண்டால் ஒரு கோட் அடிக்கும் போது ஏசி மூலம் 10 கிலோவாட் மின் ஆற்றலை எடுத்துக்கொண்டால் என்ன குளிர்ச்சி கிடைக்குமோ அது ஆற்றல் இல்லாமலே கிடைக்கும். பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசிக்களை காட்டிலும் இது அதிக ஆற்றல் வாய்ந்ததாகும்,

சந்தைகளில் கிடைக்கும் சாதாரண வெள்ளை பெயிண்ட் 80% முதல் 90% சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும், மேலும் இவை சூரிய வெப்பத்தை பெருமளவில் தடுக்காது.

இந்த பெயிண்டை சந்தைப்படுத்துவதற்காக நிறுவனம் ஒன்றுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories