விக்டோரியா: செஷல்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், சுற்றுலா, வர்த்தகம் ஆகிய துறைகளில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. பிரதமர் நரேந்திர மோடி செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய 3 இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்று மாலை அவர் தில்லியில் இருந்து விமானம் மூலம் செஷல்ஸ் புறப்பட்டு சென்றார். நேற்று இரவு செஷல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு மோடி போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா–செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடல் எல்லை வரையறையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கப்படத்தக்க எரிசக்தி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவை இதில் அடங்கும். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி, செஷல்ஸ் நாடு கடல் வழி போக்குவரத்தில் மட்டும் நண்பர் அல்ல. உண்மையான நண்பராக திகழ்கிறது. இந்தியாவும், செஷல்ஸ் நாடும் பொருளாதார வளர்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது’’ என்றார்.
செஷல்ஸ்: மோடி முனிலையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari