பிரிட்டிஷ் ஏஜென்ட் காந்தி கருத்து: கட்ஜுவுக்கு மாநிலங்களவையில் கண்டனம்

Published:

arun-jaitley புதுதில்லி: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று தனது வலைத்தளத் தில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூவுக்கு மாநிலங்களவையில் இன்று கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். மகாத்மா காந்தி நம் நாட்டின் மகத்தான குடிமகன். அவரை இங்கிலாந்தின் ஏஜென்ட் என்று ஒரு முன்னாள் நீதிபதி கூறுவது ஏற்கத் தக்கதல்ல என்றனர். இந்தக் கருத்தை அவை முன்னவரும், மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி ஏற்றுக்கொண்டு பேசுகையில் இவர் போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் எவ்வாறு நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த முறையை நாங்கள் மாற்றம் செய்ய இருக்கிறோம் என்றார். இதையடுத்து மார்க்கண்டேய கட்ஜூவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img