அரிசியை மட்டும் சமைக்கும் மனைவி! 4ஆம் நாளே விவகாரத்து செய்த கணவன்!

Published:

Koirul Anam
Koirul Anam

இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்தது மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தில், ஆடம்பரமான திருமண உடை அணிந்திருந்தார். பிலிப்ஸ் அரிசி குக்கர் மணமகளின் முக்காடு அணிந்திருந்தது. ஒரு படத்தில், மணமகனும், மணமகளும் ஒன்றாக தோற்றமளிப்பதையும், மற்றொரு படத்தில், திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களில் அனாம் கையொப்பமிடுவது போலவும் புகைப்படம் உள்ளது. அவர் மற்றொரு படத்தில் தனது மணப்பெண்ணை முத்தமிடுவதையும் காணலாம்.

Koirul Anam1 2
Koirul Anam1 2

இதுகுறித்து அனாம் தெரிவிக்கையில், என் மனைவி வெள்ளையாக இருக்கிறாள். ஆனால் பேசாமல் அமைதியாக இருப்பாள்.அரிசி சமைப்பதில் அவள் தான் அரசி. ஆனாலும், நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அனாம் அறிவித்துள்ளார்.

நீங்கள் தான் உங்கள் அன்பு மனைவியை கொண்டாடிக் கொண்டிருந்தீர்கள், அப்புறம் ஏன் சில தினங்களில் விவாகரத்து செய்தீர்கள் என்று பலர் கேட்டனர். பிரிவுக்குப் பின்னால் உள்ள காரணம் குறித்து அவர் கூறுகையில், அவள் அரிசி சமைப்பதில் கெட்டிக்காரி தான். ஆனால், வேறு எந்த உணவுகளையும் செய்வதில் சிறந்தவள் அல்ல. மொத்தத்தில் நான் தேடுவது ஒரு சகலகலா வல்லவளை.

Koirul Anam2
Koirul Anam2

திருமணம் மற்றும் விவாகரத்து எல்லாம் ஒரு காமெடியாக ஒருபக்கம் இருந்தாலும், அந்த நபர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆவதற்காக இப்படியெல்லாம் செய்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img