வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த பாம்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ராஜசேகர் மற்றும் குமரேசன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வருவதை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த மையத்திற்குள் நல்ல பாம்பு இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் உதவியோடு அந்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அவர்கள் பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.