December 7, 2024, 11:29 PM
26.8 C
Chennai

எப்படி ஊடுருவுகிறது ஃப்ளூபோட்? எச்சரிக்கும் சைபர் கிரைம்!

hackers
hackers

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் தகவல்களைத் திருடும் வைரஸ்களை உருவாக்கும் `ஃப்ளூபோட்’ என்ற மால்வேர் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

ஹேக்கர்கள் இந்த மால்வேரின் மூலமாக, போனில் ஆபத்தான மால்வேர் இருப்பதாகவும், தகவல்கள் கசிவதாகவும் எச்சரிக்கை மெசேஜ்களை அனுப்புகின்றனர்.

இந்த மெசேஜ்கள் போலியானவை. அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கைக் க்ளிக் செய்தால் வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என அதில் கூறப்பட்டாலும், ஸ்மார்ட்போனில் வைரஸை இன்ஸ்டால் செய்வதற்காகவே அந்த மெசேஜ் பயன்படுத்தப்படுகிறது.

`ஃப்ளூபோட்’ மால்வேரின் மூலம் பயனாளர்களுக்கு முதலில் மெசேஜ் அனுப்பப்பட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் வாய்ஸ் மெசேஜ் சேர்க்கப்பட்டு, மக்களைக் குழப்பி மால்வேரைப் பயனாளர்களின் போனில் சேர்க்கும்.

msg 1
msg 1

போலி மெசேஜ்கள்
கடந்த மாதம், சைபர் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ, `ஃப்ளூபோட்’ பாணியில் போலியாக மெசேஜ் தயாரித்து, பயனாளர்களுக்குப் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தியது.

எனினும் தற்போது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு மேற்கொண்ட ஆய்வின்படி, ஹாக்கர்கள் தற்போது மெசேஜ்களைப் பயன்படுத்தி, `ஃப்ளுபோட்’ மால்வேரை இன்ஸ்டால் செய்ய வைப்பதாகக் கூறுகிறார்கள்.

ALSO READ:  மக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டை முழுமை பெறச் செய்வோம்: மனதின் குரலில் மோடி!

ஆண்ட்ராய்ட் ஃபோன்களுக்கு இவ்வாறு அனுப்பப்படும் மெசேஜ்கள் டெலிவரி அலெர்ட்கள் முதல் வேறு பல்வேறு அலெர்ட்களின் வடிவில் பயனாளர்களை ஃப்ளூபோட் மால்வேரை இன்ஸ்டால் செய்ய வைக்கும் நோக்கில் அனுப்பப்படுகின்றன.

தற்போது, பயனாளர்களின் போட்டோக்கள் இணையத்தில் இருப்பதாகவும், லிங்கை க்ளிக் செய்தால் அவற்றைக் காணலாம் எனவும் கூறும் மெசேஜ்கள் பரப்படுவதாகவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.

`இந்த மெசேஜ்களில் அனுப்பப்பட்டிருக்கும் வார்த்தைகள் மிகக் குறைந்த காலகட்டத்திற்குள் மாறிக் கொண்டே இருக்கின்றன. மேலும் அவை மாறிக் கொண்டே இருக்கும்.

உங்கள் ஸ்மார்ட்ஃபோனுக்கு வரும் மெசேஜ்களில் இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள் என்று வரும் மெசேஜ்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்!’ என்று நியூசிலாந்து கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு வெளியிட்டுள்ள குறிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

`ஃப்ளூபோட்’ மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்தால் உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள், பிரவுசர் தகவல்கள் முதலான பலவற்றையும் பார்க்க முடிவதோடு, அவற்றைக் கசிய வைக்கவும் முடியும்.

போலி அலெர்ட்
ஃப்ளூபோட் மால்வேரில் இருந்து தப்பிக்க

ALSO READ:  திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

உங்கள் ஸ்க்ரீனில் திடீரென காட்டப்படும் செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் எனக் கூறும் லிங்க் எதையும் க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்யப் பல்வேறு இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டியது இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் ஃப்ளூபோட் மால்வேர் நுழைந்துவிட்டால், எந்த பாஸ்வேர்டும் புதிதாக பயன்படுத்தாமல், மொத்தமாக factory reset செய்துகொள்வது பாதுகாப்பானது. உங்கள் டேட்டாவை backup எடுத்துக் கொண்டு, factory reset செய்துகொள்ளலாம்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.07 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகள