08-02-2023 3:09 AM
More
  Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நவராத்திரி ஸ்பெஷல்: சகலமும் தரும் தேவி அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

  To Read in other Indian Languages…

  நவராத்திரி ஸ்பெஷல்: சகலமும் தரும் தேவி அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

  saradha Maheswari
  saradha Maheswari

  நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த தேவி அஷ்டகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்து அம்பாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்.

  தேவி அஷ்டகம்

  அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான ஸ்லோகம்.

  குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும்.

  ஸ்ரீகணேஸாய நம:

  1) மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம் பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்

  கருத்து: தேவியே, மஹாதேவனின் மனைவியும் மிகுந்த சக்தி வாய்ந்தவளும் பவானியும் சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில் ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும் உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.

  2) பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
  பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்

  கருத்து: பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும் பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், பரமசிவனிடம் அன்பு கொண்டவளும், பதிவிரதையும் பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

  3)அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
  மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்

  கருத்து: நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும் பவுர்ணமி முதலிய பாவதினங்களில் பூஜிக்கப்பட்டவளும் மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.

  4)காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
  ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்

  கருத்து: பிரளயகால ராத்திரியாகவும் மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகியவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.

  5) ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்
  ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
  முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்
  வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்

  கருத்து: ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும் உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும் மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும் மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.

  6)தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
  முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்

  கருத்து: தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப்பவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

  7) த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
  மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்

  கருத்து: முக்கண்கள் கொண்டவளும், பக்தர்களுக்கும் மங்களம் அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும் போகங்களையும் மோக்ஷங்களையும் கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.

  8.) ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
  ஸூக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்

  கருத்து: சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  three + eight =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,055FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,463FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

  இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

  பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

  பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

  என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

  சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  Latest News : Read Now...