
கோயில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து, இந்து முன்னணி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது.
தமிழக அரசு கோயில்களில் உள்ள பழைய நகைகளை தில்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆலையில் உருக்கி, கோயில் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதைக் கண்டித்து, இந்து முன்னணியினர், தமிழகத்தில் கோயில் பகுதிகளில், விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கியும், இந்த திட்டத்தை, தமிழக அரசு கைவிடக் கோரியும் பிரசாரங்களை செய்து வருகிறது.
இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிடக் கோரி, மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்து முன்னணியினர், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், மாவட்டத் தலைவர் அழகர்சாமி, மாணிக்க மூர்த்தி சதீஷ் ஆகிய நிர்வாகிகள், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை
ஏற்படுத்தினர்.
Posts by ரவிச்சந்திரன், மதுரை:
- நகைக்கொள்ளை; மீனாட்சிக்கு தொடர்பில்லை: அடித்துச் சொல்லும் நிஷாந்த்!
- திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா; அன்ன வாகனத்தில் சுப்ரமண்யர் வீதி உலா!
- மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாண வைபவம்!
- கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
- மதுரை நகைக்கடை கொள்ளை; நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!

