பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபாஸின் ராதேஷ்யாம்!

Published:

prabhas1
prabhas1

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும், படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு முழு, பிரபாஸ் நடிப்பில் இந்த படம் முழு காதல் படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் ‘ராதே ஷியாம்’ படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23, வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.

prabhas
prabhas

இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இதனிடையே, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் என பல மொழிகளில் சப்-டைட்டில்களோடு வெளியாக இருக்கிறது.
மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

தற்போது வெளியாகியுள்ள ‘ராதே ஷியாம்’ டீசர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

radheshayam
radheshayam

டீச்சரின் ஆரம்பத்திலேயே… “நீ யார் என்று எனக்கு தெரியும், ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன்… என்கிற வசனத்துடன் துவங்குகிறது. பின்னர் பிரபாஸ் பெரிய மாளிகையில் படுத்து கொண்டு, உன் இதயம் உடையும் சத்தம் எனக்கு கேட்கும் ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன்… உன் தோல்வியை என்னால் பார்க்க முடியும் ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன், உன் மரணத்தின் வாசனையை என்னால் நுகர முடியும் ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன். எனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் சொல்ல மாட்டேன் என தொடர்ந்து ஒரு சஸ்பென்ஸ் நீடிக்கும்படி ஆங்கிலத்தில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது”.
தொடர்ந்து பேசும் பிரபாஸ்… ஏன்னா உன்னால புரிஞ்சிக்க முடியாது. ” என் பெயர் விக்ரமாதித்யா நான் கடவுளும் இல்லை உன்னை மாதிரியும் இல்லை… ரேகை கணிதன் விக்ரமாதித்யா, என்கிற வார்த்தைகளோடு இந்த டீசர் முடிகிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img