தெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. அது காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி 11-ம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 08.11.2021 காலை 0830 மணி முதல் 09.11.2021 காலை 0830 மணி வர பெய்துள்ள மழையளவுகள் (செண்டிமீட்டரில்)
மகாபலிபுரம், செய்யூர் (இரண்டும் செங்கல்பட்டு மாவட்டம்) தலா 12;
மரக்காணம், வானூர் (விழுப்புரம்), ஒட்டன்சத்திரம் (தூத்துக்குடி), சித்தார், சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 9;
மதுராந்தகம் (செங்கல்பட்டு), புதுச்சேரி (புதுச்சேரி), சிவகிரி (தென்காசி), கன்னிமார், களியல் (கன்னியாகுமரி) தலா 8;
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), வளவனூர் (விழுப்புரம்), பேச்சிப்பாறை, மயிலாடி (கன்னியாகுமரி) தலா 7;
சென்னை கலெக்டர் அலுவலகம், தண்டையார்பேட்டை, பெரம்பூர் (சென்னை), கேளம்பாக்கம், திருப்போரூர் (செங்கல்பட்டு), திண்டிவனம் (விழுப்புரம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), புத்தன் அணை, சூரலக்கோடு, குழித்துறை, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 6;
எம்ஜிஆர் நகர், சென்னை நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), செய்யாறு, திருவண்ணாமலை, வந்தவாசி (திருவண்ணாமலை), விழுப்புரம் (விழுப்புரம்), புவனகிரி, சிதம்பரம் (கடலூர்), செங்கோட்டை (தென்காசி), கோவில்பட்டி ), பூதபாண்டி (கன்னியாகுமரி) தலா 5;
ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), எம்ஆர்சி நகர், சென்னை மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) செஞ்சி (விழுப்புரம்), பரங்கிப்பேட்டை, கடலூர், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோயில் (கடலூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), கன்னியாகுமரி, கொட்டாரம், இரணியல் (கன்னியாகுமரி), தம்மம்பட்டி (சேலம்) தலா 4;
வில்லிவாக்கம், சோழவரம், பூந்தமல்லி, செம்பரபாக்கம், அம்பத்தூர் (திருவள்ளூர்), தரமணி ARG (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம் (கடலூர்), மயிலாடுதுறை, கொள்ளிடம், சீர்காழி (மயிலாடுதுறை), நாங்குநேரி, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), தென்காசி (தென்காசி), வாலிநோக்கம், இராமேஸ்வரம், கமுதி (இராமநாதபுரம்), தூத்துக்குடி துறைமுகம் AWS, கழுகுமலை, விளாத்திகுளம், வைப்பார், காயல்பட்டினம், எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், குலசேகரப்பட்டினம், கடம்பூர், சாத்தான்குளம் (தூத்துக்குடி), கூடலூர், பெரியார் (தேனி) தலா 3;
59 இடங்களில் 2 செ.மீ. மழை பெய்திருக்கிறது; 57 இடங்களில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.