ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம்
(இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)
ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஸைல விமர்தனம்
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
(ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்த
க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும்
தேவஸேனையின் கணவனும்
தேவனும் சிவபுத்ரனுமான
ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்)
தாரகாஸூர ஹந்தாரம் மயூராஸன ஸம்ஸ்திதம்
ஸக்திபாணிஞ்ச தேவேஸம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
(தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான
வேலை கையில் தரித்தவனும்,
சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)
விஸ்வேஸ்வர ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வரதநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
(எல்லா உலகிற்கும் ஈசனான
ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு
உரியவனும் தேவனும்
ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும்,
வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும் மனதைக்
கவருகின்றவனும்
ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)
குமாரம் முநிஸார் தூலமாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
(குமரக் கடவுளும் சிறந்த
முனிவர்களின் மனதில் ஆனந்த
வடிவமாய்த் தோன்றுகிறவனும்
வள்ளியின் கணவனும்
உலகங்களுக்கு காரணமானவனும்
சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)
ப்ரளயஸ்திதி கர்தாரம் ஆதிகர்தாரமீஸ்வரம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
(ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச்
செய்கிறவரும் முதலில் உலகங்களை
படைத்தவரும், யாவருக்கும்
தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு
கொண்டவனும் ஆனந்தத்தால் மதம் கொண்டவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸூதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
(விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும் உலகிலுள்ள யாவருக்கும்
தெய்வமும், கிருத்திகையின்
புத்ரனும் எப்பொழுதும் குழந்தை
வடிவமாய் விளங்குகிறவனும்
ஜடையை தரித்தவனுமான
சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)
ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரமிதம் ய: படேத் ஸ்ருணுயாந்நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் லபேத்
(எவன் ஸ்ரீ ஸ்கந்தனின் இந்த
ஸ்தோத்திரத்தை படிப்பானோ
அவன் கோரிய பொருளை
உடன் அடைவான். முடிவில்
ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில்
அவனுடன் சேர்ந்து வசிப்பான்.)
இதி ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||