திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்; பட்டாபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
IMG 20211119 WA0011

மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
நாளை கார்த்திகையொட்டி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 11-ந்தேதி
கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபதிருவிழா தொடங்கியது.

திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி, உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிரசில் கீரிடமும், திருக்கரத்தில் சேவல் கொடியும் சாத்துப்படி செய்யப்பட்டது.

மேலும், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி அரோகரா கோசத்துடன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

கார்த்திகை தீபம் மலையில் ஏற்றப்படுவதால், மலை மற்றும் கோயில் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.