இழப்பு உங்களுக்கு தான்.. ராஜினாமா கடிதம் எழுதிய பெண்!

letter
letter

வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது அண்மைக் காலங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது. ஆனால், இதுவொரு வித்தியாசமான வீடியோ

எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆம்பர் என்ற பெண், ஆனால் அவர் தனது மேலதிகாரியின் நடத்தையால் சோர்வடைந்து வேலையை விட்டுவிட்டார்.

தனது கோபத்தை அவர் எப்படி வெளிப்படுத்தினார் தெரியுமா? தனது ராஜினாமா கடிதத்தை முதலாளிக்கு இரங்கல் அட்டை வடிவில் அனுப்பினார் இந்தப் பெண்.

அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் மனத்தாங்கல் (Dispute between Employee and Employer) ஏற்படுவது சகஜமாக இருக்கிறது.

பெரும்பாலும் ஊழியர்கள், தங்கள் முதலாளிகளுடன் நெருங்கிப் பழகுவதில்லை. “மக்கள் வேலைகளை விடுவதற்கு மோசமான வேலை காரணமல்ல. மோசமான முதலாளிகளுக்காக, நல்ல வேலைகளை விட்டுவிடுகிறார்கள்” என்ற வார்த்தைகளைக் கேட்டிருக்கலாம்.

இந்தப் பெண், தனது வேலையை விட்டதை விட, அதை அவர் எப்படி தனது முதலாளிக்குத் தெரிவித்தார் என்பது தான் வைரலாவதற்கு காரணமாகிவிட்டது.

letter 2
letter 2

‘Sorry for your loss’ என்று எழுதி தனது ராஜினாமா கடிதத்தை துக்க அட்டை வடிவில் கொடுத்தார். அதாவது, இந்த ஆங்கில வாசகத்திற்கு, நான், வேலையை விடுவது உங்களுக்கு இழப்பு என்றும் பொருள் கொள்ளலாம்.

அம்பர் என அடையாளம் காணப்பட்ட பெண், தனது ராஜினாமா கடிதத்தின் படத்தை ரெடிட்-இல் (Reddit) வெளியிட்டார். அம்பர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்ததாகவும், ஆனால் தனது மேலதிகாரியின் நடத்தையால் (Behavior in Work Place) சோர்வடைந்து வேலையை விட்டுவிட்டதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த பெண் அவருக்கு ‘உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன்’ என்று ஒரு இரங்கல் அட்டையை அனுப்பினார். “இது நான் தான், நான் இரண்டு வாரங்களில் செல்கிறேன்” என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

வேலையை விட்ட பெண்ணுக்கு, அதிக சம்பளம் மற்றும் சலுகைகளுடன் சிறந்த வேலை கிடைத்துவிட்டதாம்! “நான் கேட்டதை விட அதிகமான சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. சொந்த வாகனம் அவர்கள் படிக்கவும் எனக்கு நிதியுதவி செய்வார்கள்” என்று ஆம்பர் எழுதினார்.

ராஜினாமா கடிதத்தைப் பெறுவதற்கு தனது முதலாளி எவ்வாறு பதிலளித்தார் என்பதையும் அந்தப் பெண் வெளிப்படுத்தினார். “அவர் என்னை வெளியேறச் சொல்லவில்லை,

அதாவது எனது ஒப்பந்தத்தில் இருப்பதுபோல, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நான் வேலை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நான் ஏன் வெளியேறுகிறேன் என்று அவரும் கேட்கவில்லை” என்று அம்பர் சொன்னார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories