ஓமிக்ரான்: மருத்துவர்கள் கருத்து!

corona
corona

புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் 30 க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் புதியதொரு வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஓமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது.

இந்த வேரியண்ட் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வேரியண்டை விட மோசமானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Randeep Gularia - 2026

இது 32 முறை உருமாற்றம் பெற்றுள்ளது. இதுதான் மக்களின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. டெல்டா வைரஸே 8 முறைதான் உருமாற்றம் அடைந்தது. ஆனால் இது 32 முறை என்பதால் மிகவும் கொடிய வைரஸாகவே பார்க்கப்படுகிறது.

இது 32 முறை உருமாற்றமடைந்துள்ளதால் தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் போகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில் புதிய வைரஸானது 30க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

ஸ்பைக் புரதத்திற்கு எதிராக பல தடுப்பூசிகள் ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது, ஓமிக்ரான் பல முறை உருமாறியதால் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் திறனை அது குறைக்க வழிவகுக்கும்.

பொதுவாக தடுப்பூசிகள் வைரசின் மேற்பரப்பிலுள்ள புரதக் கூறுகளுக்கு எதிராக செயல்படுவதன் மூலமாகத்தான் உடலின் எதிர்ப்புத் திறனை தூண்டி விடும்.

தற்போது, வைரஸில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள் அதற்குத் தடை விதிப்பதால், ஓமைக்ரான் தடுப்பூசியிலிருந்து எதிர்ப்புத் திறனை வளர்த்துக்கொண்டிருப்பதாகக் கருதலாம் என்று அவர் கூறினார்.

எனவே இந்தியாவில் உள்ள தடுப்பூசிகளின் திறனை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியமானது. இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் மூலம்தான் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Antonio Flessi - 2026

மாஸ்க் அணியுங்கள். அதை எப்போதும் கடைப்பிடியுங்கள். இரு தவணை தடுப்பூசிகளை போடுங்கள். இல்லாவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வாருங்கள் என்றார்.

இந்த வைரஸானது போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரியான ஆண்டனியோ ஃபெளசி ஓமைக்ரோன் வகை கொரோனா குறித்து பேசியதில், ‘ஓமைக்ரான் மிக எளிதாக பரவும் அறிகுறிகளைக் காட்டியுள்ளது.

Tedros-Adhanom-Ghebreyesus-who-chief
Tedros-Adhanom-Ghebreyesus-who-chief

அனைத்து நாடுகளும் ஓமைக்காரனுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கத் தயாராக இருப்பது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓமைக்ரான் வகை கொரோனாவைத் தடுக்க அமெரிக்கா மீண்டும் லாக்டவுன் நடவடிக்கை எடுக்க தேவையாக இருப்பின் அதையும் செய்ய வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

iraianbu - 2026

ஓமைக்ரானின் அபாயம் குறித்து உலக சுகாதார மையமும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இது தொடர்பாக தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் இன்று மதியம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories