அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கண்வலி, சொட்டை, முடி உதிர்வது, கண்ணில் நீர் வடிதல்..!

சற்றுமுன்
health tips 1
health tips 1

கண் வலிக்கு…

கருவேலங்கொழுந்தில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து பசும்பால் விட்டரைத்து அடை போல் தட்டி இரண்டு உள்ளங்காலில் வைத்துக்கட்டி வர கண் வலி குணமாகும்.

கண்ணில் பூ விழுந்து விட்டதா?

நந்தியா வட்டைப் பூவின் இதழ்களை சுத்தமான வெள்ளைத் துணியில் முடிந்து தாய்ப்பாலில் ஊற வைத்து கண்ணில் பிழிந்து வர சில நாள்களில் பூ மறையும்.

கண்ணில் தூசு விழுந்து விட்டதா?

கண்களை கசக்காமல் இரண்டு துளி விளக்கெண்ணெய் விட்டு அப்படியே படுத்திருக்க தூசும், மணலும் தாமே ஒதுங்கி வெளிவந்து விடும்.

தலைமுடி உதிராமல் இருக்க…

ஒரு பங்கு எண்ணெயுடன் கால் பங்கு ஊமைத்தங்காயின் சாறு காய்ச்சி தவைக்கு தடவி வர தலைமுடி உதிராது. விட்டு

தலை சொட்டைக்கு…

இதனை புழு வெட்டு என்றும் கூறுவார்கள். சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை தினமும் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர சொட்டை மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.