திருக்குற்றாலத்தில் நீராட அனுமதி!

சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்
courtallam-falls-oct25
courtallam-falls-oct25

குற்றால அருவிகளில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது .

தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமான திருக்குற்றாலம் அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. பரவல் காரணமாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருந்தன அதன்படி திருக்குற்றால அருவிகளும் அனைத்தும் மூடப்பட்டு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்கள் திருக்குற்றால நாதரை வணங்கி வழிபட்டு ஆரியங்காவு அச்சன்கோவில் ஆகிய தலங்களுக்கும் சென்று பின்னர் சபரிமலை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். குற்றால அருவிகளில் நீராட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டு, அருவிகள் மூடப்பட்டிருந்த காரணத்தால் பெரிதும் வருத்தத்தில் இருந்த ஐயப்ப பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.