நெல்லை மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் 15ம் தேதி துவங்குகிறது . இதுகுறித்து நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முத்துக்கருப்பன் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவுப்படி நெல்லை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. தங்கள் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெறும் இடங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. கழக நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மண்டல தேர்தல் குழு பொறுப்பாளராக அமைச் சர் நத்தம் விஸ்வநாதன், தேர்தல் ஆலோசகர்களாக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ராசு, கொள்கை பரப்பு துணை செயலா ளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவர். நெல்லை, தச்சநல்லூர் பகுதி கழக தேர்தல், மானூர் வடக்கு, தெற்கு, சங்கர்நகர், நாராணம்மாள்புரம் பேரூராட்சி தேர்தல் டவுன் ராஜமயில் திருமண மண்டபத்திலும், பாளை, மேலப்பாளையம் பகுதி கழக தேர்தல் பாளை அருண்ஸ் மகால், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் வடக்கு, தெற்கு ஒன்றியம், திருவேங்கடம் பேரூர் கழக தேர்தல் சங்கரன்கோவில் ஜெய்சாந்தி திருமண மண்டபத்தில் நடக்கிறது. வாசுதேவநல்லூர் ஒன்றியம், சங்கரன்கோவில் ஒன்றிய கழக தேர்தல், புளியங்குடி நகரம், வாசுதேவநல் லூர், சிவகிரி, ராய கிரி பேரூர் கழக தேர்தல் சிவகிரி ஆர்கே நாச்சியார் திருமண மண்டபம், கடையநல்லூர், செங்கோட்டை, தென்காசி ஒன்றியம், செங்கோட்டை நகர கழக தேர்தல், கடையநல்லூர் நகரம், புதூர், அச்சன்புதூர், ஆய்குடி, சாம்பவர்வட கரை, வடகரை, பண்பொழி பேரூர் கழக தேர்தல் செங்கோட்டை பார்டர் இந்திரா திருமண மண்டபத்திலும் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
- Home
- நெல்லை மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் 15 ம் தேதி துவக்கம் : முத்துக்கருப்பன்
