
பட்டணத்தில் பூதம், அலாவுதினும் அற்புத விளக்கும் என ஏகப்பட்ட பூத படங்களை பார்த்து ரசித்துள்ளோம்.
மைடியர் பூதம் எனும் டிவி தொடர் 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட்டாக இருந்த நிலையில், அதே தலைப்பில் 2கே கிட்ஸ்களை கவர பூதங்களின் தலைவனாக மாறி உள்ளார் பிரபுதேவா.
இயக்குநர் என் ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், சூப்பர் டீலக்ஸ் குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பஹீரா படத்தில் மொட்டை தலையுடன் மிரட்டிய பிரபுதேவா அதே லுக்குடன் பூதமாக மாறி இந்த படத்திலும் அசத்தி உள்ளார்.
குழந்தைகளுக்காக படம் பண்ணனும் என நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த பிரபுதேவாவுக்கு இந்த படத்தின் கதை பிடித்துப் போக உடனடியாக ஓகே சொல்லி விட்டார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பஹீரா படத்தில் ரம்யா நம்பீசன் உள்பட மொத்தம் 7 ஹீரோயின்கள் நடித்துள்ள நிலையில், மைடியர் பூதம் படத்திலும் ரம்யா நம்பீசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அல்லாமல் குழந்தை நட்சத்திரம் அஸ்வந்துக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதியின் மகனாக நடித்து பல விருதுகளை குவித்த குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் தான் இந்த படத்தின் கதாநாயகன் என்றே சொல்ல வேண்டும்.
பூதமான பிரபுதேவா அஸ்வந்த் உடன் இணைந்து செய்யும் மாயாஜால சாகசங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பது கன்ஃபார்ம். குறிப்பாக அந்த பர்கர் காட்சி.
தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குநர் என். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், அஸ்வந்த் நடிப்பில் உருவாகி உள்ள மைடியர் பூதம் 2022ம் ஆண்டு குழந்தைகளை குதூகலப்படுத்த ரிலீசாக உள்ளது.
லோ பட்ஜெட் என்பதால் சிஜி காட்சிகள் டிரைலரிலேயே சொல்லிக் கொள்ளும் படி இல்லாதது போல தெரிகிறது. காஞ்சனா வரிசையில் குழந்தைகளை கவர்ந்தாலே இந்த பூதம் கமர்ஷியல் ஹிட் அடித்து விடும்.