ரொம்ப தெளிவா இருக்கானுங்க.. என்னவாகும் போற.. கேள்விக்கு சிறுவனின் பதில்!

boy - 2026

நிருபர் ஒருவர் பிரச்சார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு சிறுவனிடம் கேள்வியெழுப்பிய சம்பவம் ஒன்று நகைச்சுவையை ஏற்படுத்தியதோடு அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், நிருபர் ஒருவர் சிறுவர்கள் குழுமியிருக்கும் இடத்திற்கு சென்று ஒரு சிறுவனிடம் சாதாரண தொனியில் ஒரு கேள்வியை கேட்கிறார்.

அதாவது நீ வளர்ந்த பிறகு என்னவாக ஆக விரும்புகிறாய் ? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் சிறிதும் தயக்கம் காட்டாமல், துணிச்சலாக ‘இப்போது நாங்கள் படிக்கவே இல்லை, அப்புறம் நாங்க என்னவா ஆகுறது? என்று கேட்டுவிட்டு பின்னர் நான் வளர்ந்த பிறகு வேலைக்கு செல்வேன், ஒரு வீட்டை கட்டி அங்கு குடியேறுவேன், நன்றாக சாப்பிடுவேன், திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் இருப்பேன்,

மேலும் அப்போது எனக்கு 2 அல்லது 3 குழந்தைகள் கூட இருக்கும்” என்று நகைச்சுவையான பதிலை அளித்தான், இதனை கேட்ட நிருபரும் சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

இந்த வீடியோ நிருபரை மட்டுமல்லாது பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான விவரம் கிடைக்கவில்லை.

இருப்பினும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்ததோடு பல நேர்மறையான கமெண்டுகளையும், சிரிப்பு எமோஜிகளையும் பெற்று வருகிறது

https://www.instagram.com/tv/CYeQsYVlNvC/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories