
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து அப்பாஸ்க்கு ஜோடியாக ஆனந்தம் படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இந்த படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பாராத்திபன் கனவு, வசீகரா, ஆட்டோ கிராஃப் உள்ளிட்ட சுமார் 70 திரைப்படங்களில் நடித்து விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு சினேகா முதன்முறையாக நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், காதலர்களாக மாறிய இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும், ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக தலைகாட்டி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்ற உள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது மகளும் சினேகாவை போலவே மிகவும் க்யூட்டாக இருக்கின்றார்.
https://www.instagram.com/p/CYve9l8vepM/?utm_source=ig_embed&utm_campaign=loading