போலியோ சொட்டு மருந்து முகாம்: தேதி மாற்றம்!

Published:

poliyo - 2026

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை அடுத்து நாடு முழுவதும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Related articles

Recent articles

spot_img