
உலகத் தமிழ் மாநாடு; நடத்தப் போவது யார்?! ஓர் அமைப்பு; இரு தளங்கள்; இரு தலைவர்கள்; உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் போட்டா போட்டி!
11வது உலகத்தமிழ் மாநாடு நடத்துவது குறித்த முன்னேற்பாடுகள் இப்போது நடைபெற்று வரும் நிலையில், இது யார் தலைமையில் நடைபெறும் என்ற சர்ச்சை இப்போது கிளப்பப்பட்டுள்ளது. தன் தலைமையில்தான் நடைபெற வேண்டும் என்று முனைவர் பொன்னவைக்கோ ஓர் அறிக்கை வெளியிட்டு இருப்பதன் மூலம், இந்த சர்ச்சை சூடு பிடித்துள்ளது.
ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லியோ அல்லது இன்னொருவர் தலைவராக உரிமை கோருகிறார் என்றோ எந்த சச்சரவிலும் ஈடுபடுவதில்லை; காரணம் இருவருமே பின்வழியாக வந்தவர்கள், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் யாப்பின் வழி இருவருமே போலிகள் என்று இந்த விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் தமிழார்வலர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
11 வது உலகத் தமிழ் மாநாடு ஒருங்கிணைப்பாளராக செயல்படும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜன.18ம் தேதியிட்ட தனது சமூகத் தளப் பகிர்வுகளில் குறிப்பிட்டிருப்பதாவது…
தைத்திங்கள் பிறந்துவிட்டது! 2022ல் மாநாட்டு பணிகளை துவக்க வேண்டும் பணிகள் அதிகம். பல்வேறு தரப்பினரின் ஆதரவினைக் கோரக் கூடிய நிலையில் தற்போது பணிகள் செல்கின்றது.
11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக சில ஐரோப்பிய நாடுகளுக்கும் அமீரக நாடுகளுக்கு Masilamani Nandanயை அனுப்பி உள்ளோம்.நானும் இது குறித்து சில நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன்.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், மொழி வல்லுனர்கள், தமிழ் அமைப்பு, சங்கம் என எவ்வளவு பேராளர்களை அழைப்பது எந்த நாட்டில் எப்போது திட்டமிட்ட படி நடத்துவது போன்ற விடயங்களை குறித்து பேசுவார். பிறகு IATR செயற்குழு வில் இது குறித்து விவாதித்து IATR தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து அறிவிப்பார்… என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நான்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவா் என்று, தமிழகத்தைச் சேர்ந்த முனைவா் மு.பொன்னவைக்கோ பொன்னவைக்கோ தான் தான் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத் தமிழ்
சென்னை: ‘உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவா் நான்தான் என்றும் அந்த மன்றத்தின் 11-ஆவது மாநாட்டை நடத்தும் பொறுப்பு தன்னிடமே உள்ளது’ என்றும் முனைவா் மு.பொன்னவைக்கோ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தலைவா் டத்தோ ஸ்ரீ மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான மையக்குழு உறுப்பினா்கள் தோ்வு நடைபெற்றது. அப்போது தலைவா், துணைத் தலைவா், பொதுச் செயலாளா் என பல்வேறு பொறுப்புகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு பொதுக்குழு உறுப்பினா்களிடம் கோரப்பட்டது.
முனைவா் பிரான்சிஸ் சவரிமுத்து நிா்வாகிகளுக்கான பெயா்களைப் பரிந்துரை செய்தாா். வேறு எந்த பெயா்களும் பரிந்துரைக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் பொறுப்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
அந்த வகையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் 11-ஆவது மாநாடு நடத்தும் பொறுப்பு, மன்றத்தின் தலைவரான (பொன்னவைக்கோ) என்னிடமே உள்ளது. இந்த மாநாடு தொடா்பாக முதல்வரைச் சந்தித்து அவரிடம் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.