தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் 16 கோரிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து அந்த தகவலை வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளன்ர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போலீஸார் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ள கோரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :-
1.காவல்துறைக்கு பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும்.
2.காவலர்களின் பெற்றோர்கள்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
3.காவலர்களின் தர ஊதியம் 1900ரூ லிருந்து 2400ரூ யாக உயர்த்த வேண்டும்.
4.ஓய்வுகாலம் வரை சொந்த மாவட்டத்தில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
5.காவலர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 50% சலுகை வழங்க வேண்டும்.
6.வாரம் ஒருமுறை அனுமதி விடுப்பு கட்டாயப்படுத்த வேண்டும்.
7.மாதம்தோறும் ஒவ்வொரு காவலர்களுக்கும் ரூ4000 முதல் ரூ5000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால் பெட்ரோல் அலவன்ஸ் கொடுக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
8.இரண்டாம்நிலை காவலர் பதவியில் இருந்து 7 வருடங்களில் முதன்நிலை காவலர்களாக பதவி உயர்வும் 12 வருடங்களில் தலைமை காவலர்களாக பதவி உயர்வும் 20 வருடங்களில் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வும் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
9. குறைந்த வட்டி வீதத்தில் வீடு கட்டுவதற்கும் பெர்ஷனல் லோன் பெறுவதற்கும் 30 நாட்களில் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
10.காவலர்களின் யூனிபார்ம் ஊர்க்காவல்படை,வாட்ச்மேன்,செக்யூரிட்டி, மற்றும் மற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் யூனிபார்ம் க்கும் வித்தியாசப்படுத்தி காவலர்களுக்கு தரமான உடைகள் கொடுக்க வேண்டும்.
11.அரசு விடுமுறை நாட்களில் ( பொங்கள், தீபாவளி,குடியரசுதினம், சுதந்திரதினம், ரம்ஜான், பக்ரீத், x mass…,etc) பணிபுரியும் காவலர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
12.பயணப்படி TA 10% லிருந்து 20% உயர்த்த வேண்டும்.14. இடர்படி 750ரூ ஆகவும் மருத்துவபடி 500ரூ ஆகவும் உயர்த்த வேண்டும்.15. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பணிபுரியும் காவலருக்கு வழங்கும் ETR 200ரூ லிருந்து 400 ரூ ஆக உயர்த்த வேண்டும்.
13. ஒருநாளைக்கு ஒரு காவலருக்கு ஒரு அலுவல் மட்டும் வழங்க வேண்டும்.
14.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும்.
15.அனைத்து மாவட்டத்திலும் காவலர்களின் நல அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
16.Risk அலவன்ஸ் 400ரூ லிருந்து 1000ரூ ஆக உயர்த்த வேண்டும்.
இதை அதிகம் ஷேர் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தவும் என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.
[wp_ad_camp_4]



