உணவு டெலிவரி செய்வது போல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை!

Prakash kumar - 2026

சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஸ்விக்கி டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைனில் ஸ்விக்கி உணவு டெலிவரியில் வேலை செய்வது போல் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்சுவிகி நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கொண்டு ஒருவர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

kantcha - 2026

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பிரகாஷ்குமார் சேனாபதி என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதே போல் இன்னும் வேறு யாரெல்லாம் இது போல் உணவு டெலிவரி நிறுவனத்தின் பெயரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து பிரகாஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது போல் அங்கிருக்கும் ரிசார்ட்களில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை பார்ட்டியும் விருப்பப்பட்ட பெண்களை அழைத்து சென்று நெருக்கமாக இருக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

இதற்கென தனி நெட்வொர்க்கே இயங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories