தவறவிட்ட நகைகள்: வாட்ஸ்அப் குழு மூலம் மீட்ட வியாபாரி!

gold 1 - 2026

சென்னையில் நகை செய்யும் வியாபாரி தொலைத்து விட்ட நகைகளை, வாட்ஸ்அப் குரூப் மூலம் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் மஹிபால். நகை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 17ஆம் தேதி வேப்பேரியில் உள்ள தன் வீட்டிலிருந்து 365 கிராம் நகையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தொலைந்து போன நகைகளை மீட்பதற்கு மஹிபால் சாதுரியமான முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.

தொலைந்து போன நகைகளை எடுப்பவர்கள், நகைக்கடை அல்லது நகை அடகு கடையில் தான் விற்க முற்படுவார்கள் என்ற அடிப்படையில், சென்னையில் உள்ள நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வியாபாரிகள் சங்கத்தை அணுகி அதன் வாட்ஸ்அப் குரூப் மூலம் தொலைந்து போன நகைகள் குறித்த தகவல்களை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

யாரேனும் இந்த வடிவமைப்பிலான நகைகளை விற்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இந்நிலையில்தான் நேற்று புரசைவாக்கம் சண்முக ராயர் தெருவில் உள்ள தனியார் நகை அடகு கடை ஒன்றில் ரமேஷ் என்பவர் நகைகளை விற்பனை செய்ய வந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த நகை வாட்ஸ்அப் குரூப்பில் காணாமல் போனதாக போடப்பட்ட நகை என்பதை அறிந்த, நகை அடகுக் கடைக்காரர் உடனடியாக மஹிபாலுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மஹிபால் பெரியமேடு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புரசைவாக்கத்தில் உள்ள அந்த நகை அடகு கடைக்கு சென்று நகையை விற்க வந்த ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தன் நண்பர் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் கொடுத்த தங்க நகை என தெரிவித்துள்ளார். இதையடுத்து வெங்கடேஷ் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், தன் மாமா ஜோதி என்பவர் மூலம் தன் தாய் கலா கொடுத்த நகைகள் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஜோதி என்பவரை விசாரணை செய்த போது தான், கடந்த 17ஆம் தேதி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பழமுதிர்ச்சோலை அருகே சாலையில் கேட்பாரற்று தங்கநகைகள் கிடந்ததாகவும், அதில் சுமார் 365 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை தன் சகோதரி மற்றும் சகோதரியின் மகள் குடும்பத்திற்கு பிரித்துக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் உள்ள 365 கிராம் நகை அனைத்தையும் மீட்டுள்ளனர். சாலையில் கிடந்த நகைகளை போலீசாரிடம் ஒப்படைக்காமல் அபகரிக்க முயன்ற நான்கு பேரையும் பெரியமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்வதிலும் ஜோதி என்பவர் தான் சாலையில் கிடந்த நகைகளை எடுத்துச் என்பதும் உறுதியானது.

சுமார் 50 சவரன் நகைகளை சாலையில் தவறவிட்ட உடன் பதட்டப்படாமல், சாதுர்யமாக அந்த நகைகளின் புகைப்படங்களை நகை அடகு கடை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து தேட முயற்சி செய்ததன் மூலம், ஒரே வாரத்தில் காணாமல் போன நகையை மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலீசார் விசாரணை முடிந்து நாளை நகைகளை மஹிபாலிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாலையில் கிடந்த நகைகளை போலீசாரிடம் ஒப்படைக்காமல் சொந்தமாக்க முயன்ற நபர்களை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories