space - 2026

ஆழ் விண்வெளி உணவு சேலஞ்ச்: நாசா அறிவித்த போட்டி!

சற்றுமுன் உலகம்
space - 2026

விண்வெளி வீரர்களை விண்ணில் நாம் அறிந்திராத இடங்களுக்கு அனுப்பி, பல்வேறு அறிவியல் விவகாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நாசா தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், விண்வெளி வீரர்கள் விண்ணில் உயிர் வாழ்வதற்கு மிக முக்கிய தேவையாக இருக்கும் உணவை எப்படி அவர்களுக்கு அளிப்பது என்பதில் குழம்பி நிற்கிறது நாசா.

நாசா அமைப்பும் கனடா ஸ்பேஸ் ஏஜென்சி அமைப்பும் இணைந்து மக்களிடம் `ஆழ் விண்வெளி உணவு சேலஞ்ச்’ என்பதை அறிவித்து, அதன் மூலம் மிகக் குறைந்த அளவிலான வளங்களைப் பயன்படுத்தி எளிதாக உணவு தயாரிப்பதையும், குறைவான கழிவுகளை உருவாக்குவதையும் மக்கள் சிந்தித்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

உணவு என்பது நீண்ட காலம் சேமிக்கப்பட்டால் அதில் உள்ள சத்துகள் இழக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் விண்வெளிப் பயணம் பல ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் என்பதால், விண்வெளி வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துவது உகந்தது அல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.