ஆன்லைனில் சுகர் மிஷின் ஆர்டர் செய்த முதியவர்! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!

online order - 2026

ஆன்லைன் மூலம், சுகர் அளவை பரிசோதனை செய்யும் கருவியை ஆர்டர் செய்த நபருக்கு வேறொரு பொருள் வந்து சேர்ந்ததால், அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

கொரோனா தொற்றிக்கு பிறகான நாட்களில், அதிக கட்டுப்பாடுகளின் பெயர்களில் வீட்டிலேயே மக்கள் இருப்பதால், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்க அதிக விருப்பம் காட்டி வருகின்றனர்.

பொது இடங்களுக்கு சென்று, அலைந்து திரிந்து பொருட்களை தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், ஆன்லைன் மூலம் பொறுமையாக தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் தேடி, பொருட்களை ஆர்டர் செய்கின்றனர்.

இப்படி நாம் மிக பொறுமையாக ஆர்டர் செய்து, நமக்கு வரும் பார்சலில், நாம் நினைத்து கூட பார்க்காத பொருள் இருப்பது, அதிர்ச்சியையும் ஏற்படுத்தும்.

rasaiya - 2026

உதாரணத்திற்கு, பல இடங்களில் தாங்கள் ஆர்டர் செய்யும் விலையுயர்ந்த பொருட்களுக்கு பதிலாக, கற்கள், சோப் உள்ளிட்ட பல பொருட்கள் இருப்பதை நாம் செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் படித்திருப்போம்.

தற்போது அப்படி ஒரு சம்பவம் தான், மதுரையைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு நடந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலை ரைஸ்மில் ரோட்டைச் சேர்ந்தவர் ஜெய்சிங் ராசையா (வயது 74).

ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, ஜெய்சிங் ரசய்யாவின் மனைவிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

sugar machine - 2026

இதனால், வாரத்திற்கு 5 முறை சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு வேண்டி, 2 மாதத்துக்கு ஒரு முறை, ஆன்லைன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் காட்டும் கருவியை, வெளிநாட்டில் இருக்கும் ஜெய்சிங் மகன் ஆர்டர் செய்து கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல சர்க்கரை அளவீடு கருவியை ஜெய்சிங்கின் மகன், சமீபத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இந்த தடவை வந்த பார்சலில் கருவிக்கு பதிலாக, இரண்டு காலாவதியான சாக்லேட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட ஜெய்சிங், அதிர்ச்சி அடைந்துள்ளார். சுகர் அளவீடு கருவிக்கு பதிலாக, சாக்லேட்டுகள் இருந்ததால், முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்து போயுள்ளார் ஜெய்சிங் ராசையா.

chocolate 1 - 2026

இதனைத் தொடர்ந்து, பொருளை ஆர்டர் செய்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்து ஜெயசிங்கிற்கு சரியான தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ஜெய்சிங் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், அவர்கள் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories