ganthimathi - 2026

தேசியக்கொடிக்கு கோயில் யானை செய்த மரியாதை!

சற்றுமுன் உள்ளூர் செய்திகள் நெல்லை
ganthimathi - 2026

குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் வாசல் முன்பு உள்ள தேசியக் கொடிக்கு கோயில் யானை காந்திமதி மரியாதை செய்தது.

இந்தியாவில் 73ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று (ஜன.26) கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஒரு சில கோயில்களில் மட்டும் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம்.

அந்த வகையில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோயில் வாசல் முன்பு உள்ள தேசியக்கொடிக்கு கோயில் நிர்வாக அலுவலர் ராமராஜூ கொடியேற்றி மரியாதை செய்தார். அப்போது தேசியக் கொடிக்கு கோயில் யானை காந்திமதியும் மரியாதை செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.