02-02-2023 12:45 PM
More
  Homeசற்றுமுன்மதமாற்ற விவகாரத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி வழக்கு சிபிஐ., விசாரணைக்கு மாற்றம்! நீதிபதி கொடுத்த ‘குட்டு’!

  To Read in other Indian Languages…

  மதமாற்ற விவகாரத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி வழக்கு சிபிஐ., விசாரணைக்கு மாற்றம்! நீதிபதி கொடுத்த ‘குட்டு’!

  அமைச்சரே (மதமாற்ற விசாரணைக்கு எதிரான) ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், மாநில காவல்துறை விசாரணையைத் தொடர முடியாது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க

  lavanya case transfered to cbi - Dhinasari Tamil

  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி என்ற சிற்றூரில் இயங்கிவரும் கிறிஸ்துவ மிஷனரி பள்ளியான தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ பயின்றுவந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி, மதமாற்றக் கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தார். இது குறித்து மரண வாக்குமூலமாக தான் அனுபவித்த கொடுமைகளையும் வீடியோ பதிவுகளில் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே நீர்த்துப் போகச் செய்யும்படி, மாவட்ட எஸ்.பி., இதில் மதமாற்ற கோணம் இல்லை என்று, விசாரணைகள் ஏதும் நடைபெறாத நிலையிலேயே ஊடகங்களில் பேட்டி அளித்தார். தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் பள்ளிக்கும் கிறிஸ்துவ மிஷனரிக்கும் சாதகமாக கருத்துகளைத் தெரிவித்தார். இது பெருமளவில் சாதாரண மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

  இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துப் போராடிய பாஜக., இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, மாணவி தற்கொலை வழக்கு குறித்து சிபிஐ., விசாரிக்க வேண்டும், உண்மை வெளிக்கொணரப் பட வேண்டும், உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார்.

  இந்நிலையில் இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற படுவதாக தெரிவித்தது.

  பாஜக., தலைவர் கே.அண்ணாமலை இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், லாவண்யா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றத்துக்கு நன்றி! – என்று குற்ப்பிட்டுள்ளார்.

  தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை முயற்சியால் பள்ளி மாணவியின் கட்டாய மதமாற்ற வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது, தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


  #JusticeForLavanya வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக, உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், மதமாற்றத்துக்கு உத்தரவிடும் பைபிள் பகுதியையும் மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருப்பதை வரவேற்றுள்ளனர். இதுவரையில்லாத சிறப்பம்சமாக இந்த உத்தரவை பலரும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர்.

  உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டிருக்கும் சில அம்சங்கள்…

  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி: ஜி.ஆர்.சுவாமிநாதன், லாவண்யா குடும்ப வழக்கறிஞர்: அட்வகேட் கார்த்திகேய வேங்கடாசலபதி.
  அரசு தரப்பு: ஏ.எஸ்.ஜி – செந்தில் குமார்.
  பள்ளித் தரப்பு: பாதிரி சேவியர் அருள்ராஜ்.

  இந்த வழக்கின் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்ட அம்சங்களில் சில…

  * அந்தக் குழந்தையின் காணொளியும், பெற்றோரின் புகாரும் மதமாற்றம் பற்றி குறிப்பிட்டிருக்கும் போது, “மதமாற்றம் பற்றி ஏதுமில்லை” என்று எஸ்.பி ரவளி பிரியா ஐபிஎஸ்., குறிப்பிட்டிருப்பது தேவையில்லாதது. எனவே, அந்தக் குழந்தையின் தந்தை, “இவர்கள் பாரபட்சமாக இருப்பதால், இவர்கள் விசாரித்தால் நீதி கிடைக்காது” என்று அச்சப்படுவதில் தவறில்லை.

  * தஞ்சாவூர் எஸ்.பி ரவளி பிரியா ஏன் மின்கம்பியை மிதித்தது போல துடித்து, ‘மதமாற்றம் பற்றி ஒன்றுமில்லை’ என்று சொன்னார் என்பது புரியவில்லை.

  * அந்தப் பள்ளியை நடத்துவது ஒரு சபை (அன்பு மார்க்க Congregation). பைபிள் Matthew 28: 19-20: இல் குறிப்பிடுவது “ஆகையால், நீங்கள் போய், எல்லா தேசத்தாரையும் சீடராக்குங்கள், பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கடைப்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்.”

  பைபிள் Mark 16 : 14-18: யேசு சொல்கிறார், “உலகமெங்கும் சென்று, எல்லா உயிரினங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், ஆனால் விசுவாசிக்காதவன் கண்டனம் செய்யப்படுவான்”.


  (இந்த வசனங்கள் தி ஹிண்டுவில் 30.01.2022 அன்று வெளியாகியிருக்கின்றன. Sudipta Datta talks about Maria Aurora Couto’s “Goa : A Daughter’s Story”. )


  mickelpatti school - Dhinasari Tamil

  * மேலும் அந்த ஊர்ப் பெயரே மைக்கேல்பட்டி என்றாகியிருக்கிறது. அதன் உண்மையான பெயரையும் கண்டுபிடிக்கலாம். எனவே மதமாற்றம் என்பதை ஒதுக்கிவிட முடியாது. அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். அதை விசாரிக்காமல் எஸ்பி., ஒதுக்கியது முறையல்ல.

  வழக்கை விசாரிக்காமல், அந்த வீடியோ எடுத்தவர் (முத்துவேல்) மீது வழக்குப் பதிவு செய்ய எஸ்.பி சொன்னது முறையற்றது. வீடியோ எடுத்தது தவறில்லை, அந்தக் குழந்தையின் முகத்தை மறைக்காமல் சமூக வலைதளங்களில் வெளியிட்டது தவறு.

  * கல்வி அமைச்சரும், கல்வி நிர்வாகமும் மதமாற்றத்தை மறைக்கும் விதத்தில் அறிக்கை விட்டிருப்பது தவறு.

  * இரண்டு வருடங்களுக்கு முன் CHILDLINE பெற்ற புகார் பற்றியும், சித்தி பற்றிய வதந்தியும் பரப்பப்பட்டுள்ளது. அந்த ‘லீக்’ இந்த விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது (deliberate leaks dent the credibility of the investigation). மாஜிஸ்டிரேட்டுக்கு கொடுத்த குழந்தையின் மரண வாக்குமூலத்தில் சித்தி பற்றி எந்தக் குறையும் எழுப்பப்படவில்லை.

  * விசாரணையை சீர்குலைக்க காவல்துறை முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஒரு உயர் பதவியில் இருக்கும் அமைச்சரே (மதமாற்ற விசாரணைக்கு எதிரான) ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், மாநில காவல்துறை விசாரணையைத் தொடர முடியாது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறேன்!

  News Source: High Ranking Ministers Have Taken Stand, Police Trying To Derail Investigation: Madras HC Orders CBI Probe Into Forced Conversion-Suicide Case [Read Judgment]

  முழுமையான உத்தரவை வாசிக்க…

  Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  eleven + ten =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,055FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,430FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

  பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

  என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

  சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

  விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

  Latest News : Read Now...