
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாதனம் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனம் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ், ஐ-கேர் மோட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன.
அதேபோல் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.
4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன.