chennai metro rail project - 2026

பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட மெட்ரோ!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை
chennai metro rail project - 2026

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் அடிப்படையில் மெட்ரோ ரயில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களின் வசதிகளை மேம்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தற்போது ரயிலில் பயணம் செய்ய ‘கியூஆர்கோடு’, ஸ்மார்ட் கார்டு, டோக்கன் முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

இதனால் காலதாமதம் ஆகிறது. இதனை மேலும் எளிதாக்கும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பயண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயணிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பயணம் செய்ய முடியும்.

இந்த கார்டுகள் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் கட்டண நுழைவு வாயிலில் ‘ஸ்கேன்’ செய்தால் போதும்.

பயண கட்டணம் ஆன்லைன் மூலம் கணக்கிடப்பட்டு வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு விடும். இதனால் மெட்ரோ ரயில் பயணத்தை மிக எளிமையாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.