
உஸ்பெகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் உள்ள கரடி குகையில், தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்பெஸ்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள உயிரியல் பூங்காவில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தண்டவாளத்தின் மீது குழந்தையைப் பிடித்திருந்த தாய், பெண் குழந்தையை கரடியின் குகைக்குள் வீசியதை பார்வையாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
ஜூசு என்ற ஆண் கரடி, குழந்தையின் அருகில் சென்று மோப்பம் பிடித்ததை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆனால் உயிரியல் பூங்கா காவலர்கள் கரடியை கூண்டின் உட்புற பகுதிக்குள் இழுத்துச் சென்றதால், இதனால் அந்த குழந்தையை பத்திரமாக மீட்க முடிந்தது.
இந்த முழு சம்பவத்தையும் அம்மா பார்த்துக் கொண்டு இருந்தது தான் இதில் ஆச்சர்யமான விஷயம். இதையடுத்து, அந்த பெண் மீது கொலை செய்ய முயற்சித்தற்தாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்..
எனினும் கீழே விழுந்ததில் தலையில் காயம் மற்றும் வெட்டுக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண் தனது பெண் குழந்தையை கரடியின் குகைக்குள் எல்லோர் முன்னிலையிலும் வீசியதாக உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
எனினும், இதுவரை அந்த பெண்ணின் நோக்கம் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். சிறுமியின் வாசனையை உணர்ந்த கரடி அக்குழந்தையின் தாயை பார்த்துக் கொண்டு இருந்ததால் குழந்தைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும அவர் கூறினார்.