சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி.. கூண்டில் சிக்கிய நபர்! வைரல்!

lion - 2026

ஒரு நபர் உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை சீண்டும் வேலையில் ஈடுபட்டார்.

இந்த நபர் சற்றும் யோசிக்காமல் நேரடியாக கூண்டில் கையை நுழைப்பதை வீடியோவில் காணலாம். அந்த நபர் சிங்கத்தைத் சீண்டும் நோக்கில், அதனை தொட முயன்றார். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததோடு, சிங்கம் அவரது வலது கையை கவ்விப் பிடித்தது.

சிங்கம் தாக்கிய சம்பவம் செனகலில் உள்ள பார்க் ஹென் உயிரியல் பூங்கா என கூறப்படுகிறது. சிங்கத்தின் கர்ஜனையின் சத்தத்தில் காட்டின் கொடூரமான விலங்குகள் கூட நடுங்குகின்றன என்ற போது மனிதன் எம்மாத்திரம்.

சிங்கம் மனிதனை தாக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகத்தில் (Social Media) வெளியான சமீபத்திய இந்த வீடியோவில், கூண்டில் அடைபட்ட சிங்கம் ஒரு மனிதனின் கையை தனது வாயில் கெட்டியாக கவ்விக் கொண்டிருப்பதைக் நீங்கள் காணலாம். மனிதனின் அலறல் சத்தத்தையும் கேட்கலாம்.

சிங்கத்தை சீண்ட நினைத்த நபர் தனது கைகளை மீட்க முடிந்தவரை முயற்சி செய்கிறார். அதேநேரம் அருகில் இருந்த சிலர் கற்களை வீசி சிங்கத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்த போதும் சிங்கம் நகரவில்லை.

இருப்பினும், சில நொடிகளில் சிங்கம் மனிதனின் கையை விடுவித்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த வீடியோவை பார்த்த பிறகு யாரும் இப்படி ஒரு தவறை செய்ய நினைக்க மாட்டார்கள்.

இந்த வீடியோ யூடியூப்பில் எவ்ரிதிங் இன் ரியல் லைஃப் டிவி என்ற சேனலில் பகிரப்பட்டது. இதுவரை இந்த வீடியோ 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்து சிலர் அதிர்ச்சியடைந்த நிலையில், பலர் நகைச்சுவையாகவும் பதில் அளித்துள்ளனர்.

இங்கு பாடம் கற்ற பிறகு, இந்த நபர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவார் என்று ஒரு பயனர் நகைச்சுவையாக எழுதினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories