ஓசூரில் இந்தியாவின் முதல் மெட்டாவர்ஸ் திருமணம்!

Published:

Metaverse4 - 2026

இந்த டிஜிட்டல் உலகத்தில் பல்வேறு புதிய டெக்னலாஜி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது, அதில் ஒன்றுதான் மெட்டாவர்ஸ். மெட்டாவர்ஸ் (Metaverse) என்பது ஒரு மெய்நிகர், அதாவது விசுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்பதாகும்.

டிஜிட்டல் உலகத்தில் வாழவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். தற்போது இந்த மெட்டாவர்ஸ் மூலம் திருமணங்களும் நடைபெற தொடங்கியுள்ளது.

உலகிலேயே முதன்முதலாக மெட்டாவெர்ஸ் முறையில் திருமண விழா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த‌ ட்ரேசி மற்றும் டேவ் காக்னன் இருவரும் மெய்நிகர் திருமணம் செய்த முதல் ஜோடிகள் ஆவார்கள்.

Metaverse3 - 2026

மெட்டாவெர்ஸ் முறைக்காக இவர்களைப் போலவே உள்ள உருவங்கள் மற்றும் பிடித்த உடையணிந்து, பிடித்த இடம் எல்லாமே மெட்டவர்சில் வடிவமைக்கப்படும்.

இந்த திருமணத்தை அமெரிக்காவின் விர்பெலா நிறுவனம் வடிவமைத்து நடத்தியது.

இந்த நிலையில், இந்தியாவிலும் முதன்முறையாக மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஓசூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
Screenshot 2022 0208 095637 - 2026

சென்னை ஐஐடியில் பணியாற்றி வரும் தினேஷிற்கும், நந்தினி என்பவருக்கும் ஓசூர் அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் திருமண நடைபெற்றது.

சிவலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி பாஞ்சலி தம்பதியினரின் மகள் ஜனக நந்தினி, இவரும் கம்ப்யூட்டர் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சிவலிங்கபுரம் கிராமத்தில் ஜனக நந்தினியின் இல்லத்தில் நடைபெற்றது.

காலையில் திருமணம் முடிந்த பின்னர் மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெற்றது.

Metaverse2 - 2026

திருமணத்தை தொடர்ந்து, வரவேற்பு நிகழ்ச்சியில் மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வரவேற்பு நிகழ்சியை நடத்தியுள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மறைந்த பெண்ணின் தந்தை, திருமண வரவேற்பிற்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் வடிவமைக்கட்டிருந்தது.

மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இதில் புதுமண தம்பதியரின் நண்பர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் அவதார் ஆடைகளை அணிந்தபடி பங்கேற்றுள்ளனர்.

Metaverse1 - 2026

மெட்டாவெர்ஸ் முறையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் “தந்தையின் உருவமும் தத்ரூபமாக இருந்தது” என தம்பதினர் தெரிவித்தனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இணையதள வசதி இல்லாத சிவலிங்கபுரம் கிராமத்தில் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாது என்பதால் அருகிலுள்ள ஜேசுராஜபுரம் கிராமத்தில் இதனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

பிளாக்செயின் என்பது மெட்டாவெர்ஸின் அடிப்படை தொழில்நுட்பம். கிரிப்டோ காயினை மைனிங் செய்து வரும் தினேஷ், மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை வைத்து தன்னுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டார்.

Metaverse - 2026

இதை தன்னுடைய வருங்கால மனைவியிடம் சொல்ல, அவரும் இதற்கு சம்மதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட 91 நிறுவனங்கள் அடங்கிய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பெயரை ‘மெட்டா’ என்று மாற்றினார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்.

இதன் பின்னணியில் இருப்பது ‘மெட்டாவெர்ஸ்’ எனும் புதிய டிஜிட்டல் உலகம்தான் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img